உள்நாடு

டாக்டர் அஷ்ஷெய்ஹ். முஹம்மத் பாஸி (ரஹ்) அவர்களின் 28 வது வருட கதமுல் குர்ஆன் மஜ்லிஸ்.

பேருவளை சீனன்கோட்டை கங்கானம்கொடை நூராணிய்யா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்தம் நடைபெற்று வரும் ஷாதுலிய்யா தரீக்காவின் முன்னாள் செய்ஹுஸ் ஸஜ்ஜாதா டாக்டர் அஷ்செய்ஹ் முஹம்மத் பாஸி பின் செய்ஹ் முஹம்மத் இப்றாஹிம் அல் பாஸி அல் மக்கி, அஷ் ஷாதிலி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரிலான, 28வது வருட கதமுல் குர்ஆன் மஜ்லிஸ் எதிர்வரும் 12.12.2024 ஆம் திகதி நடைபெறும்.

அஸர் தொழுகையை தொடர்ந்து கதமுல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா, யாகூதிய்யா, ஹழரா மஜ்லிஸும், இஷா தொழுகையை தொடர்ந்து
முஸாக்கராவும், அதனை தொடர்ந்து துஆவும் இடம் பெறும்.
மேற்படி, ஸாவிய்யா பரிபாலன குழு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் கலீபாக்கள், உலமாக்கள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், இஹ்வான்கள் பலரும் கலந்து கொள்வர்.

அன்னாரின் ஞாபகார்த்தமாக ஷாதுலிய்யா தரீக்காவை பின்பற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் ஞாபகர்த்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *