உள்நாடு

காத்தான்குடியில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல்

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அண்மித்த பகுதிகளில் அனர்த்த நிலைமைகளின் போது களப்பணியாற்றும் சமூக நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை ஒன்றினைக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல் செவ்வாய்க்கிழமை (10) ஜுமைரா பீச் பெலஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

சமேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது களத்தில் நின்று சமூகப்பணியாற்றிய அமைப்புகளை ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படும் போது சிறந்த முறையில் முகாமைத்துவம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்கள், உலமாக்கள், சமூக அமைப்புக்கள் , பள்ளிவாயல் நிர்வாகளிகள்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *