அரிசி ஆலைகளில் அதிகாரிகள் தங்கி கண்காணிப்பு
அரிசி ஆலைகளை கண்காணிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் இரண்டு அதிகாரிகள் வீதம் அந்தந்த ஆலைகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை அறிவிப்பை அடுத்து பிரபல அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதற்கு இணங்க செயற்பட்டு வருகின்றனர்
இந்நிலையில் பிரபல அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலை அடுத்து வெளிநாடு சென்றுள்ளார். இத்தகவலை ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கி செய்தி வெளியிட்டுள்ளன.