மேல் மாகாண சபையின் “விஸ்கம் பிரபா-2024”
சித்திரம் மற்றும் கைப்பணி கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் ஸ்ரீஜயவர்தனபுர,பத்தரமுல்லவில் அமைந்துள்ள மாகாண சபையின் கட்டிட தொகுதியின் தள மாடியில் அண்மையில் இடம்பெற்றது.மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நிகழ்வில் பிரதம அதிதியாக கலநது கொண்டு கண்காட்சியையும் சந்தையையும் ஆரம்பித்து வைத்தார்.
மேல் மாகாண போக்குவரத்து, மாகண வீதிகள்,கைத்தூழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கண்காட்சி சந்தையில் கிராமிய மகளிர் பயிற்சி நிலைய பெண்களின் பல்வேறு தயாரிப்புகளும் இடம்பெற்றுள்ளன.மேல்மாகாண பிரதமசெயலாளர் தம்மிகா விஜேசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரம் கலந்துகொண்டனர்.




(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)