முன்னாள் குற்றத் தடுப்பு பிரிவு அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு 13ம் திகதி வரை விளக்க மறியல்
குற்றத் தடுப்பு பிரிவு முன்னாள் அத்தியசகர் சிரேஷ்ட பொலீஸ் அதிகாரி நெவில் சில்வாவை எ திர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமா று இரத்தினபுரி மாஜிஸ்திரேட் நீதவான் (10) தீர்ப்பு வழங்கினார்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்த்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 1 கோடி 25 இலட்சம் ரூபா ரூபா பெறுமதியான வேன் ஒன்றையும் பல இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் பலவற்றையும் பலாத்காரமாக தன்வசம் வைத்திருந்து அதனை வேறு ஒரு நபருக்கு வழங்கியதாக செய்யப்பட்ட முறைப் பாட்டுக்கிணங்க இவர் கொழும்பில் சேவை செய்து வந்த காரியாலயத்தில் இவர் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந் த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைய டுத்து நீதவான் இத்தீர்ப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)