உதயம் பத்திரிகையின் ஆசிரியர் என்.எம்.அமீனின் தாயார் மறைவுக்கு பேராசிரியர் காதர் முஹிதீன் உட்பட அரசியல் தலைவர்கள் அனுதாபம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், இலங்கை மணிச்சுடர் நாளிதழ் மூத்த ஊடகவியலாளர் ஹாஜி என். எம். அமீன் தாயார் ஹாஜியானி மரியம் பீவி (வயது 92) சனிக்கிழமை காலமானார். அவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், மனித நேய கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா மற்றும் ஸதமிழகத்தில் உள்ள உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
உதயம் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், இலங்கை நாட்டின் மணிச்சுடர் நாளிதழ் மூத்த ஊடகவியலாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களின் தாயார் மரியம் பீவி (வயது 92) சனிக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார்.
இவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், இலங்கை மணிச்சுடர் நாளிதழ் மூத்த ஊடகவியலாளர் ஹாஜி என். எம். அமீன் தாயார் ஹாஜியானி மரியம் பீவி மரணமுற்ள
செய்தியை கேட்டு மிகவும் துக்கமும் துயரமும் அடைந்தேன்.
இலங்கை நாட்டில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் ஹாஜி என். எம். அமீன் நற்பணிகளுக்கு அவரது தாயார் பெரும் உதவியாக இருந்துள்ளார். அவரது மறைவு பேரிழப்புக்கு அல்லாவுடைய பெரும் கருணையால் மீள் வளத்துக்கும் அல்லாவிடம் பிராத்திப்போம். அவருடைய பிளைகளை பொறுத்தி கொண்டு ஜன்னத்தூல் பிர்ஃதௌஸ் என்னும் பேராணந்த பெரும் வீட்டை இறைவன் அவருக்கு வழங்குவனாக அவரின் மறைவால் வாடும் அவரது மக்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும்
ஜம்ரன் ஜமீலன் என்னும் அழகிய பொறுமையை வழங்குவதற்கு இறைஞ்சிவோம்.எனது சார்பிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என். எம். அமீன் தாயார் மறைவிற்கு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ எம். முஹம்மது அபூபக்ர், மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மனித நேய கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாகிகள், இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள, ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)