பாணந்துறை பிரதேச செயலகப்பிரிவின் அபிவிருத்திக்குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி நியமனம்
பாணந்துறை பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்திக் குழுத் தலைவராக பாணந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் களுத்துறை மாவட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி நியமனம் பெற்றுள்ளார்.
இந்த நியமனத்தின் முலம் பாணந்துறை தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் பாணந்துறை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக சுமார் இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தககது.
இவர் சிறந்த பேச்சாளரும் சமூக செயற்பாட்டு சட்டத்தரணியுமாவார். களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் தேசிய மக்கள் சக்தியின் பாணந்துறை பிரதிநிதிகளில் ஒருவராக தேர்தலில் களமிறங்கி மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்றம் தெரிவானார்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)