உள்நாடு

மாவடிப்பள்ளியில் உயிர் நீத்தோருக்காக இன்று இடம்பெற்ற சர்வ மத நிகழ்வு

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் உயிர் நீத்த உறவுகளுக்கான ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை நிகழ்வு இன்று அதன் தலைவர் சிவஸ்ரீ க.வி.பிரமீன் ஐயா அவர்களின் தலைமையில் காரைதீவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வ மத மதகுருமார்கள், மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் சிவ ஜெயராஜன், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன், திடீர் மரண விசாரணை அதிகாரி, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.ஜெயராஜ், முன்னாள் அரசாங்க அதிபர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் சாணக, ஆலய பரிபாலன சபையினர், இந்துமா மன்ற உறுப்பினர்கள், உலமா சபைகளின் நிர்வாகிகள், ராவணா அமைப்பினர், உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சர்வமத தலைவர்களின் பிரார்த்தனையோடு ஆரம்பமான நிகழ்வில் அதிதிகள் உரையை தொடர்ந்து அனைவரும் இணைந்து அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு, உயிர்களை காக்க களப்பணி செய்த வீரர்களும் நினைவுகூரப்பட்டனர்.

இனம் மதம் மொழிகளுக்கு அப்பால் மனிதநேயமும் அன்பும் உடையவர்களாக நல்லிணக்கத்தோடு எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதற்காகவே இந்நிகழ்வானது கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *