சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு
பேருவளை சீனன்கோட்டை ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் உலமாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வொன்று எதிர்வரும் 11ஆம் திகதி (2024-12-11) புதன்கிழமை நடைபெறும்.
சீனன்கோட்டை பள்ளிச் சங்க வழிகாட்டலின் கீழ் ஜாமியத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இச் செயலமர்வு கலாபீட பாஸிய்யா மண்டபத்தில் பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அஷ்ஷெய்ஹ். அல்-ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் நடைபெறுவதுடன் டாக்டர். ரயீஸ் மீரா பயிற்சி செயலமர்வை நடாத்துவார்.
சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிவாசல்கள், ஷாதுலிய்யா ஸாவிய்யாக்கள், சீனன்கோட்டை குர்ஆன் மதாரிஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள. குர்ஆன் மத்ரஸாக்களில் கடமை புரியும் உலமாக்கள், முஅல்லிமாக்கள் 50 பேர் வரை இந்த தலைமைத்துவ செயலமர்வில் பங்குபற்றுவர் என ஜாமியத்துல் பாஸியத்துஷ் ஷாலுலிய்யா கலாபீட இணைப் பொருளாளர் அல்-ஹாஜ் முஸ்னி உவைஸ் தெரிவித்தார்.
பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலாபீட நிர்வாக சபை தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.ஸி.எம் ஹம்ஸா பணிப்பாளர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி அல்-ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி பீ.ஏ), அதிபர் அல் உஸ்தாத் மெளலவி. எம் அஸ்மிகான் (முஅய்யிதி) சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார், இணைச் செயலாளர் அல்-ஹாஜ் எம்.எம்.எம் சிஹாப் உட்பட உறுப்பினர்கள், ஜாமியத்துல் பாஸியத்துஷ் ஷாலுலிய்யா கலாபீட நிர்வாக சபை உறுப்பினர்கள் பங்குபற்றுவர்.


(பேருவளை பீ.எம் முக்தார்)