மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி
அனுராதபுரம் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட சிராவஸ்திபுர கல்வடுவாமடுவ பகுதியில் மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிராவஸ்திபுர கல்வடுவாடுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கூலித் தொழில் புரிந்து வரும் இவர் நாளாந்த ஊதியத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அதே பகுதியைச் சேர்ந்த தோட்டம் ஒன்றில் தேக்குமரக் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.
பின்னர் பிரதேவாசிகளின் உதவியுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ . ஆரிப்- அநுராதபுரம்)