ஹாபிஸ் இஸ்ஸதீன் 2023ஆம் ஆண்டின் அரச இலக்கிய விருது பெற்றார்
பேருவளை பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் அரும்பு அறிவியல் சஞ்சிகையின்ஆசிரியரும் பன்னூலாசிரியருமான ஹாபிஸ் இஸ்ஸதீனுக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நாணவித இலக்கியத்திற்கான அரசு விருது வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி அலரி மாளிகையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றின் போது மேற்படி விருது கையளிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட ஓர் இளம் ஆசிரியை கருப்பு வெள்ளை சாம்பல் நிற நியமனம் என்ற நூலில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் தேசிய ஒருமைப்பாடு சமூக பாதுகாப்பு வெகுசன ஊடக அமைச்சு மூலம் விருது வழங்கலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(ஏ.எல். எம். சத்தார்)