Tuesday, August 12, 2025
Latest:
உலகம்

சவூதி அரேபியா, உச்சி மாநாடுகளின் காப்பகம் மற்றும் உலகின் திசைகாட்டி

சவூதி அரேபியா என்பது, அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச அரங்குகளில் சர்வதேச உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதில் அதன் தலைமையை நிலைநிறுத்தியுள்ளது, உரையாடலின் கலங்கரை விளக்கமாக, முடிவெடுக்கும் தளமாக, மற்றும் ஒவ்வொரு மன்றத்திலும் பின்பற்றப்பட்டு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாக மாறியுள்ள ஒரு தேசமாகும்.
பல தசாப்தங்களாக, சவூதி அரேபியா பல உச்சிமாநாடுகளை, உலக நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் உலகத் தலைவர்களது பங்குபற்றலுடன் நடத்தியது, அவை சர்வதேச பிரச்சினைகள் பற்றி விவாதித்து, பொதுவான சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளை முன்வைக்கின்றன. இப்படியாக சவூதி அரேபியா, இஸ்லாமிய, அரபு மற்றும் சர்வதேச உச்சிமாநாடுகள் முதல் சர்வதேச மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் வரை நடாத்தி வருகிறது. இந்த உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகள் பல்வேறு விதமானவை. மேலும் சவூதி அரேபியா முக்கிய நிலையான அச்சாக உள்ளது, மேலும் இது அமைதி மற்றும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு உழைக்கும் நாடுகளின் முன்னணியில் உள்ளது. மேலும் அது உலக மக்களின் நலன்களை ஈட்டிக் கொடுக்கும் விதமாகவும், மனிதகுலம் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் செயற்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், சவூதி அரேபியா இந்த அணுகுமுறையை கைக்கொண்டது. மேலும் சவூதி அரேபியா பல்வேறு துறைகளில் – அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்… – பல உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதன் மூலம், பிராந்திய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் சமூகத்தில் தனக்கென ஒரு ஸ்தானத்தையும், ஒரு கனதியையும் தக்க வைத்துக் கொண்டது. ஒரு கனதியையும் தக்க வைத்துக் கொண்டது.

அரசியல் மட்டத்தில், நவம்பர் 11, 2023 அன்று ரியாத்தில் நடைபெற்ற கூட்டு அரபு-இஸ்லாமிய உச்சிமாநாடு, சவூதி அரேபியா தலைமையிலான அரபு-இஸ்லாமிய மந்திரி குழுவை உருவாக்கியது, இது காசா மீதான போரை நிறுத்துவதற்கான சர்வதேச நகர்வை உருவாக்க பங்களித்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே இராச்சியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இரு நாட்டுத் தீர்வைச் செயல்படுத்துவதற்கான சர்வதேச கூட்டணியின் உருவாக்கத்திற்கு இது வித்திட்டது. அக்டோபர் 30, 2024 அன்று கூட்டணியின் முதல் கூட்டத்தை ரியாத் நடத்தியது.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாகவும், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் அவர்களின் உத்தரவுகளின் அடிப்படையிலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகவும், அவரது பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத், மற்றும், அவரது சகோதரர்கள், சகோதர அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் ஒருங்கிணைப்புடன்; நவம்பர் 11, 2024 அன்று ரியாத், விஷேட அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டை நடத்தியது.

பொருளாதார மட்டத்தில், சர்வதேச சுரங்க மாநாட்டின் மூன்றாவது பதிப்பின் நிகழ்வுகள் ஜனவரி 9 முதல் 11, 2024 வரை ரியாத்தில் நடைபெற்றது, இதில் முதலீட்டுத் தலைவர்கள், முக்கிய சுரங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 14,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 133 நாடுகளில் இருந்து இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள், 100 அனுசரணையாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் தவிர, அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகள் என 250 பேச்சாளர்கள் மாநாட்டின் 70 அமர்வுகளில் பங்கேற்றனர்.

ஜனவரி 24, 2024 அன்று, ரியாத்தில் “ரியல் எஸ்டேட்டின் எதிர்காலம்” என்ற மாநாடு நடைபெற்றது, இதில் 85 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேச்சாளர்கள் பங்குபற்றினர். மேலும் பொருளாதார வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், முடிவெடுப்பவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறை யில் மிளிரும் நிபுணர்கள் பங்குபற்றினர். இம்மாநாட்டின் விளைவாக 50 ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவற்றின் மொத்த மதிப்பு 100 பில்லியன் ரியால்களைத் தாண்டியது.

தலைநகர் ரியாத், ஏப்ரல் 28 மற்றும் 29, 2024 அன்று உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை ரியாத்தில் நடத்தியது, இதில் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள், சர்வதேச வல்லுநர்கள், கருத்துருவாக்கத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 92 நாடுகளைச் சேர்ந்த, அரசு மற்றும் தனியார் துறைகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சிந்தனையாளர்கள் வருகை தந்திருந்தனர்; இதனால், டாவோஸுக்கு வெளியே மன்றம் கண்ட மிகப்பெரிய வருகையை கூட்டம் பதிவு செய்தது.

2024 மே 20 முதல் 22, 2024 வரை ஃபியூச்சர் ஆஃப் ஏவியேஷன் 2024 மாநாட்டின் நிகழ்வுகளை ரியாத் நடத்தியது. இது 8,500 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறை தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. குறிப்பாக, 130 நாடுகளில் இருந்து, 31 அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்ட தூதுக்கு குழுக்கள் மற்றும் 77 சிவில் விமானப் போக்குவரத்து துறை தலைவர்கள் வருகை தந்திருந்தனர். இந்த மாநாட்டின் விளைவாக 102 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஒரு உடன்படிக்கையும், இன்னுமொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவற்றின் பெறுமானம் 75 பில்லியன் ரியால்களைத் தாண்டியது.

நிதி தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச மாநாட்டின் முதல் பதிப்பு “24FinTech” தலைநகர் ரியாத்தில் செப்டம்பர் 3 முதல் 5, 2024 வரை நடைபெற்றது. அங்கு சிறந்த கையூட்டும் நம்பிக்கையூட்டும் ஒரு துறையின் அபார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பல தயாரிப்புகள் மற்றும் முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சவூதி அரேபியா, இந்தத் துறையில் உலகளாவிய மையமாக இருக்க வேண்டும் என்ற தேசிய அபிலாஷைகளுக்கு ளை நிகர்க்கும் விதமாக இது அமைந்திருந்தது.

130 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் உலகளாவிய போக்குவரத்து மற்றும் தளவாடத் துறை (லாஜிஸ்டிக்ஸ்) யின் தலைவர்கள் மற்றும் 13,000 பார்வையாளர்களின் வருகையுடன், 2024 அக்டோபர் 12 மற்றும் 14, திகதிகளில் உலக லாஜிஸ்டிக்ஸ் மன்றத்தின் முதல் பதிப்பை ரியாத் நடத்தியது. இதில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மேலும், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையின் 77 தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பரவலான பங்கேற்புடன், 2024 அக்டோபர் 23 முதல் 24 வரை ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் (UNIDO) பல்தரப்பு தொழில் கொள்கை மன்றத்தை (MIPF) சவூதி அரேபியா நடத்தியது. இதில் மாண்புமிகு அமைச்சர்கள், உலகெங்கிலும் உள்ள தொழில்துறை மாற்றத்தின் தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *