உள்நாடு

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு; மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (01) ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுமார் 25 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் , மட்டக்களப்பு மாவட்டம் முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உருவாக்கம், அதன் செயற்பாடுகள், கடந்த காலங்களில் எதிர் நோக்கிய சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து சம்மேளனச் செயலாளர் பாரிஸ் எடுத்துரைத்ததுடன் அமைப்பின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு ஏதுவான ஆக்கபூர்வமான கருத்துக்கள் சக ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்தும் நிலையான திட்டங்களோடு இவ் அமைப்பினால் கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கியத்துவம் குறிந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஏ.ஜீ. அப்துல் கபூர், எம்.ஐ.பாறூக், எம்.எஸ்.எம்.சஜி, எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ், எம்.எச்.எம்.அன்வர்,எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி, எம்.ஐ.அப்துல் நஸார்,எம்.பஹத் ஜுனைட் ஆகியோரால் ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அமைப்பின் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாட்டிற்கு இளம் ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்துதல், அவர்களுக்கு வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும், மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அதற்கான தீர்வுகளை நாடி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் இக்கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எச்.எம்.எம். ஹமீமுக்கு அவரது இன, மத வேறுபாடற்ற சேவையைப் பாராட்டி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *