2ஆவதும், இறுதியுமான டெஸ்ட்; முதலில் துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்கா
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் , இறுதியுமான போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்துள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு டெஸ்ட் போட்டிகளின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. அதற்கமைய இத் தொடரின் 2ஆவதும் இறுதியுமான போட்டி இன்று (5) ஹெபெர்காவில் ஆரம்பித்துள்ளது.
இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் பவுமா முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்துள்ளார். இப்போட்டியில் இலங்கை அணி நிச்சயம் வெற்றி பெற்றால் மாத்திரமே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.