தேசிய மட்டப் போட்டியில் களுத்துறை மாவட்ட சாந்த மயியாள் தேசிய பாடசாலைக்கு மூன்றாமிடம்
போதைப் பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்திற்காக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வலுவூட்டல் தொனிப் பொருளில் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற கலை மற்றும் அனிமேஷன் காண்ணொளி(Art and Animation Video Competition)போட்டியில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மத்துகம சாந்த மரியாள் தேசிய பாடசாலை பத்தாமாண்டு மாணவன் பஸந்து ரனுலக வடவல தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த வேலைத் திட்டம் தொடர்பான பரிசளிப்பு வைபவம் கடந்த வாரம் கடற்படை தலைமையக கேடபோர்கூடத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவிடமிருந்து மாணவன் சான்றிதழ் மற்றும் பணப் பரிசு பெற்றுக்கொண்டார்.கடற்படை தளபதி பிரியன்த பெரேரா, மத்துகம சாந்த மேரீ தேசிய பாடசாலை பிரதி அதிபர் சாமரி முனசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
போதைப் பொருள் மற்றும் அபாயகரமான ஒளதடங்கள் பாவனைத் தடுப்பு செயலணியின் தலைமையில் கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்ச, அபாயகர ஒளதடங்கள் கட்டுப்பாட்டுச் சபை, கொழும்புத் திட்டம் மற்றும் டயலொக் நிறுவனம் என்பவற்றின் பங்களிப்புடன் மேற்படி போதைப் பொருள் ஒழிப்பு ஊக்குவிப்புக்கான தேசிய மட்ட நிகழ்வு இடம்பெற்றது.
(எம்.எஸ் எம்.முன்தஸிர்)