உள்நாடு

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் புதிய சட்டம் ; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி, குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் வங்குரோத்து சட்டமூலம் மற்றும் கணக்காய்வு சட்டமூலத்திற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல், நிதிமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை திறம்பட தடுக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

தணிக்கைச் சட்டத்தின் திருத்தங்கள் கடனாளிகளின் நம்பிக்கையை மேம்படுத்தும் மற்றும் கடனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும்” என அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *