ஒரு கடையில் கொள்ளையிட்ட பொருட்களை வேறு கடையில் விற்க முயன்ற திருடன் கைது
சில்லறைக் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடி வேறு கடை ஒன்றுக்கு விற்பனை செய்ய சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள சில்லறைக் கடை ஒன்று திங்கட்கிழமை இரவு (2) கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கொள்ளையடிக்கப்பட்டிருந்த கடையினை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார நேரில் சென்று பார்வையிட்டு திருடர்களை பிடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், பொருட்களை கொள்ளையிட்ட திருடர்கள் இருவர் பொருட்களை ரிதிதென்னை பகுதியிலுள்ள கடை ஒன்றுக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்ற போது ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)