ஊடுருவப்பட்டது வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் ஊடுருவப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதனை மீளமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகக் குறுகிய காலத்தில் இணையதளம் ஊடுருவப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக நவம்பர் 12ஆம் திகதி இணைத்தளம் ஊடுருவப்பட்டிருந்தது.