புத்தளம் ஜெம்மியதுல் உலமா ஏற்பாட்டில் மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் நகர கிளைக்கு உட்பட்ட 22 பாடசாலைகளிலும் Perfects மாணவ மாணவி தலைவர்களுக்கு Leadership Skills Development Program செய்யப்பட வேண்டும் எமது ஊரில் நல்ல தலைவர்களை எதிர்காலத்தில் உறுவாக்க வேண்டும் மற்றும் சமூகத்தை சிந்திக்கக்கூடிய வாலிபர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்ற மிகப் பெரிய நோக்கத்துடனும் இந்நிகழ்வுகள் பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 21.11.2024 ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் மாணவ மாணவிகளின் தலைவர்களுக்கான Leadership Skills Development Program ஏற்பாடு செய்யப்பட்டு மிக அழகான முறையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து சிறப்பித்தனர்.
அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளை அந்த மாணவர்களிடம் ஒரு விடயத்தை வேண்டிக் கொண்டது
உங்களின் தரப்பில் இருந்து பாடசாலைக்கு தேவையான ஒரு Proposal ஒன்று தயார் செய்து தருமாறும் அதற்கான Funds ஸை ஜம்இய்யா தனவந்தர்களிடம் இருந்து உங்களுக்கு பெற்று தந்து அந்த Project உங்கள் தலைமையில் நடைப்பெற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டது.
இதற்கு உதவி செய்த பாடசாலையின் அதிபர் முஹ்சி அவர்களுக்கும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவ செல்வங்கள் அனைவரையும் அல்லாஹூதாஆலா கபூல் செய்வானாக.
இதற்காக நேரம் ஒதுக்கி வருகை தந்த வளவாளர்களுக்கும் ஜம்இய்யா நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
இதற்காக உதவி செய்த அனைவரின் பொருளாதாரத்திலும் அல்லாஹூதாஆலா பரகத் செய்வானாக
கல்வி உபக்குழு
தலைவர்
அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை