கடந்த 14 வருடங்களில் 4194 யானைகள் உயிரிழப்பு
கடந்த 14 வருடங்களில் மனித நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 4194 யானைகள் உயிரிழந்துள்ளதாக யானை ஆய்வாளர் சமீர விதுரங்க தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் மனித நடவடிக்கைகளாலும் மிகக் குறைவான நோய்களாலும் கிட்டத்தட்ட 470 யானைகள் உத்தியோகபூர்வமாக இறந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பெரும்பாலான யானைகள் சட்டவிரோத மின்கம்பிகள்,வாய் வெடி உணவுவகைகளை உட்கொள்ளல் மற்றும் துப்பாக்கிச்சூடு போன்றவைகள் மூலம் கொல்லப்படுகிறன.
2024 ஆம் ஆண்டு இது வரைக்கும் 200 கும் மேற்பட்ட காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன். இந்த மரணங்கள் அனைத்தும் மனிதர்களின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ளதுடன் . தேசிய வனப்பகுதியில் போதுமான அளவு உணவுகள் இல்லாமையால் அந்த மிருகங்கள் தாயகத்தை சுற்றி வருவது சகஜம் எனவும் அவர் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )