உதவும் உள்ளங்களின் 179வது வெள்ளிதோறும் தர்மம்
ஓட்டமாவடி – காவத்தமுனை உதவும் உள்ளங்கள் சமூக சேவைகள் அமைப்பின் வாரம் தோறும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திவரும் வெள்ளிதர்மம் உலருணவு பொதிகள் வழங்கும் திட்டத்தினை இம்முறை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்ங்களுக்கு செல்லாது உறவினர்களது வீடுகளில் தங்கியிருந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில் காகித நகர் கிராமசேவகர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்தில் துறையடி வீதி, ஜனசவிய வீதி, பனிச்சையடி வீதி, பாடசாலை வீதி, ஹிஸ்புல்லாஹ் குறுக்கு வீதி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பகளுக்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 80 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வைக்கப்பட்டன.
இதற்கான நிதியுதவிகளை உதவும் உள்ளங்கள் சமூக சேவைகள் அமைப்பினர் கத்தார் குழு, குவைட் குழு மற்றும் பிரதேச தனவந்தர்கள் மூலமாக கிடைக்கப்பெற்றதோடு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பீல்ட் குழுவினரது ஒத்துழைப்போடு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






(எஸ்.எம்.எம்.முர்ஷித்)