கற்பிட்டி பிரதேச வெள்ள அனர்த்த பகுதிகளுக்கு அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கள விஜயம்
கற்பிட்டி பிரதேசத்தில் மழை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கபட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கான நிவாரணங்கள் அதற்கான தீர்வுகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தபட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)