பாராளுமன்றத்தில் இருபது பாராளுமன்ற உத்தியோகத்தர் பதவிகளுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்
பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உத்தியோகத்தர் பதவிகளுக்கு பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.இந்த பதவிகள் ஆட்சேர்ப்பு தொடர்பான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்ங்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் கோரப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையின் பிரகாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் பாராளுமன்றில் நிலவும் இருபது பாராளுமன்ற உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதவிகளுக்கான விண்ணப்பம் மற்றும் விபரங்கள் பாராளுமன்றத்தின் www.parlianent.lk எனும் இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும்.விண்ணப்பதாரிகளுக்கான வயதெல்லை 21-35ஆகும்.அரச மற்றும் மாகாண அரச சேவைகளிலும் அரச கூட்டுத்தாபனம்,நியதிச் சபைகளில் சேவையில் உள்ளவர்களுக்கு உச்ச வயதெல்லை ஏற்புடையதாகாது.
மேற்படி பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை மொழி, மொழிபெயர்ப்பு ஆற்றல் மற்றும் பொது அறிவும் நுண்ணறிவும் எனும் இரண்டு பாடவிதானங்கள் கொண்ட ஒவ்வொன்றும் இரண்டு மணித்தியாலம எழுத்துப் பரீட்சையாக இடம்பெறவுள்ளது.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)