உள்நாடு

தலைப் பிறை தென்பட்டதால் ஜுமாதல் ஆகிராஹ் மாதம் ஆரம்பம்.

ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஆகிரஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று டிசம்பர் 02 ஆம் திகதி திங்கள் கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகத்திலும் ஜுமாதல் ஆகிரஹ் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதால் நேற்று திங்கற்கிழமை ஜுமாதல் ஆகிரஹ் மாதம் ஆரம்பமாகின்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் தலைவர் மெளலவி அஷ் ஷெய்க் ஹிஷாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி, ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள்,ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *