உள்நாடு

சாய்ந்தமருது இன்பாஸ் உதவி சுங்க அத்தியட்சகராக நியமனம்

சாய்ந்தமருதை சேர்ந்த நாகூர்தம்பி முஹமட் இன்பாஸ் என்பவர் அண்மையில் நடைபெற்ற உதவி சுங்க அத்தியட்சகர் நியமனத்துக்கான திறந்த போட்டிப்பரீட்சை, நேர்முக தேர்வில் சித்தியடைந்து உதவி சுங்க அத்தியட்சகராக (தரம்-II) நியமனம் பெற்றுள்ளார்.

இவர் ஓர் சட்டத்தரணி (Attorney-At-Law) மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரியும் (B.Sc. in MIT) ஆவார்.

திரு. முஸ்தபா நாகூர்தம்பி (Rtd. officer SLPA) , ஹபசியா தம்பதியரின் புதல்வரும், வைத்தியர் சப்ராஸ் (MBBS) மற்றும் பொறியியலாளர் சாஜித் (Lecturer SEUSL) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

மேலும் இன்பாஸ், இலங்கை சட்டக் கல்லூரியின் “சட்ட மாணவர் முஸ்லிம் மஜ்லிஸ்” முன்னாள் தலைவர் என்பதோடு ,கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *