மேல் மாகாணத்தில் டெங்கு தீவிரம்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவும் தொடர் மழை காரணமாகவும் டெங்கு நோய் அதிகம் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 19487 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை டெங்கு நோய் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)