மாவடிப்பள்ளி விபத்தில் மரணித்தோருக்கு காத்தான்குடி பள்ளிவாசல், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அனுதாபம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவடிப்பள்ளி பாலத்தினை விட்டு தடம் புரண்ட உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ளமை தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் விடுக்கும் அனுதாபச் செய்தி……
காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள மாவடிப்பள்ளி எனும் பகுதியில் கடந்த 2024.11.26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அப் பகுதியினூடாக சம்மாந்துறை பிரதேசத்தினை நோக்கி பயணித்த உழவு இயந்திரமானது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவடிப்பள்ளி பாலத்தினை விட்டு தடம் புரண்டதினால் நிந்தtர் காஷிபுல் உலூம் அறபுக் கலாசாலையில் கல்வி கற்று விடுமுறை காரணமாக பயணித்த ஆறு மாணவர்களும் இன்னும் சிலரும் நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ள பெருந்துயரினை எண்ணி கவலை அடைகின்றோம்.
குறித்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மீட்புப் பணிகள் இரவு பகல் பாராது இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை காலப்பகுதியில் வெள்ள நீரில் மூழ்கியவர்கள் அனைவரும் முழுமையாக மீட்கப்படாத நிலையில் இதற்காக பாடுபட்டு வரும் அரச, அரச சார்பாற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரினை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.
குறித்த விபத்தினால் மரணித்த உயிர்களின் இழப்பு என்பது எந்த வகையிலும் மனிதனால் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். இறை நாட்டத்துடன் இடம்பெற்ற இந்த கோர விபத்து தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஆழ்ந்த அனுதாபங்களை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றது.
அந்தவகையில், குறித்த கோர விபத்தின் காரணமாக மரணித்த அனைவர்களினதும் ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்பதுடன், அன்னார்களை ஷஹீதுகளின் கூட்டத்தில் சேர்த்து அருள் புரிவதோடு,
ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதி கிடைக்க வேண்டுமெனவும், அன்னார்களினது இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும், அழகிய பொறுமையை வழங்க வேண்டுமெனவும், குறித்த விபத்து காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அனைவரும் மிக விரைவாக பு+ரண சுகம் கிடைக்க வேண்டுமெனவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி.
இவ்வண்ணம்,
உப தலைவர்/பொதுச் செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,
காத்தான்குடி.