மக்கொன ஜும்ஆ பள்ளியில் கந்தூரி மஜ்லிஸ்
மக்கொனை ஜும்ஆப் பள்ளிவாசலில் அடங்கப்பட்டுள்ள ஆத்மீக ஞானி சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ். இஸ்மாயில் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் பெயரிலான கத்தமுல் குர்ஆன் தமாம் கந்தூரி மஜ்லிஸ் எதிர்வரும் 30ஆம் திகதி (2024-11-30) சனிக்கிழமை மாலை சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ். மெளலவி அல்-ஹாஜ் ஸக்கி அஹமத் (அஷ்ரபி-யமனி) பின் அஷ்ஷெய்ஹ் காலிப் அலவி ஹாஜியார் அலவிய்யத்துல் காதிரி தலைமையில் நடைபெறும் என பள்ளிவாசல் தர்மகர்த்தா அல்-ஹாஜ் ஏ.எஸ்.எம் அரூஸ் தெரிவித்தார்.
அன்றைய தினம் அஸர் தொழுகையையடுத்து ஸுப்ஹான மெளலித் மற்றும் புர்தா மஜ்லிஸ் இடம்பெறும். பின்னர் ஹத்தாத் ராத்தீப் மஜ்லிஸும், மார்க்கச் சொற்பொழிவும், துஆப் பிரார்த்தனையும் இடம் பெறவுள்ளது.
பேருவளை மொல்லியமலை ஹிழ்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம கதீப் மெளலவி அல்-ஹாஜ் எம்.எஸ்.எம் பாஸில் (அஷ்ரபி-அம்ஜதி) ஆத்மீக ஞானி அஷ்ஷெய்ஹ். இஸ்மாயில் வலியுல்லாஹ்வின் வாழ்க்கை வரலாறு பற்றி விஷேட சொற்பொழிவாற்றுவார்.
உலமாக்கள், அலவிய்யா தரீக்காவின் முக்கியஸ்தர்கள், முஸ்லிம்கள் நிகழ்வில் பங்குபற்றுவர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)