Uncategorized

உயர்தர பரீட்சை குறித்து வெள்ளியன்று இறுதி முடிவு

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீள்பகுப்பாய்வு செய்து அதன் பின்னர் மீண்டும் உயர்தர பரீட்சையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மாணவர்களைக் கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மோசமான வானிலை காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்றுமுன்தினம் (26) தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *