முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று வேதாந்தி; பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அனுதாபம்
முஸ்லிம் தேசியத்தின் முதல் விதை, முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று மர்ஹும் வேதாந்தி சேகு இஸ்ஸடீன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அன்னாரது மறைவையிட்டு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில், அரசியல் பெருவெளியின் அடர் வனம், ஆல விருட்சத்தின் ஆணிவேர், முஸ்லிம் தனித்துவ அரசின் காப்பரணாக இருந்து அரும்பணி செய்த மாதலைவன், பதவி அரசியலுக்கும் கொள்கை அரசியலுக்கும் இடைக்கோடிட முடிந்த முதுசம்.
சட்டம், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், சமுகவியல் அனைத்தினதும் அழியாத தடம் வேதாந்தி எனும் வேதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்கும் உயரிய சுவனபதியில் நிலைபெறவும் இறையருள் வேண்டுகிறேன். அன்னாரின் குடும்ப உறவினர்களின் ஆறுதலுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.