உலகம்

சர்­வ­தேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம்-2024

சர்­வ­தேச பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் வரு­டாந்தம் இன்று நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அனுஷ்டிக்­கப்­ப­டு­கி­றது.

இதனை முன்­னிட்டு இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்கம் இன்று நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்­ள நிகழ்வு கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் பிற்பகல் 04.00 மணி முதல் இடம்பெறும்.

இந்நிகழ்வில், இலங்கை பலஸ்தீன் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் தலை­வரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்­நா­யக்க வழவேற்புரை நிகழ்த்துவார். இந்நிகழ்வில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதரக பதில் தூதுவர் ஹிஷாம் அபு தாஹா, வெளி­வி­வ­கார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், இலங்­கைக்­கான ஐ.நா. வதி­விட பிர­தி­நிதி Marc-Andre Franche, பேராதனை பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, பேராதனை பல்கலைக்கழக கலை பீட சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி ஆகியோர் உரை நிகழ்த்­த­வுள்­ளனர்.

இந்நிகழ்வில், கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய “பலஸ்தீனம்” நூல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படும். இலங்கை பலஸ்தீனம் ஒரு­மைப்­பாட்டு இயக்­கத்தின் பிரதித் தலைவர் ஹனா இப்றாஹிம் நன்­றி­யுரை நிகழ்த்­துவார்.

இந்நிகழ்வில் சகலரையும் கலந்து கொண்டு பலஸ்தீனு விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *