கண்டி மாவட்டத்தில் அனர்த்தங்களினால் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிப்பு.
கண்டி மாவட்டத்தில் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் தற்போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த 193 குடும்பங்கள் தற்போது தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் கண்டி மாவட்டத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. என்றாலும், 03 பேர் காயமடைந்துள்ளனர். 08 வீடுகள் முழுமையாகவும் 220 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் கண்டி மாவட்ட மேலதிக செயலாளர் நிலூகா புளத்கே விடுத்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
( ரஷீத் எம். றியாழ்)