உள்நாடு

கலாஓயா பெருக்கெடுப்பு; அபாய எச்சரிக்கை

கலாஒய தாழ்நில பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி நொச்சியாகம ,இராஞாங்கனை ,வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலக பகுதியில் தாழ் நில பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது இராஞாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 9900 கன அடி நீர் கலா ஓயவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.

அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டு அதனூடாக வினாடிக்கு 3605 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

கலாவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 10 அடி உயரத்தில் திறக்கப்பட்டு வினாடிக்கு 10420 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *