காற்றின் வேகம் அதிகரிக்கலாம், தெதுறு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு, வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
நாட்டின் பல பகுதிகளில் இன்று மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலைமை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு.
அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மல்வத்து ஓயாவைச் சுற்றியுள்ள மஹாவிலச்சிய, வெங்கலச்செட்டிக்குளம், நானாட்டான், முசலி மற்றும் மடு பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அறிவிப்பு.
குருநாகல் மாவட்டத்தின் ஊடாக பாய்ந்து செல்லும் தெதுரு ஓயா ஆற்றின் நீர்மட்டம் தற்போதைய தொடர்மழைவீழ்ச்சி காரணமாக பாரியளவில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தெதுரு ஓயா ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பிரதேசங்களுக்கும், ஆற்றை அண்டிய வேறு சில பிரதேசங்களுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அதன் பிரகாரம் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தெதுரு ஓயாவை அண்மித்த தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.