கண்டி மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம்
கண்டி மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, மெததும்பர, கண்டி கங்கவட்ட கோரளை, உடுதும்பரை, தொலுவ, யட்டிநுவர, உடபலாத்த, பாத்த ஹேவாஹெட்ட, உடுநுவர, பாத்ததும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இப்பிரதேச குடியிருப்பாளர்கள் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
( ரஷீத் எம். றியாழ்)