ஓட்டமாவடி – காவத்தமுனை மக்கள் இடம்பெயர்வு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பிரதேச மக்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர்மழை காரணமாக குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக இதுவரை 129 குடும்பங்ளைச் சேர்ந்த 352 பேர் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, பாதிக்கப்பட்ட பலர் தங்களது உறவினர்கள் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான அனைத்துவித தேவைகளையும் ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் ஏ.தாஹிர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)