உள்நாடு

பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கான புதிய வகுப்புக்கள் ஜனவரி 30 ஆந் திகதி ஆரம்பம்

2025ம் ஆண்டில் சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கான புதிய வகுப்புக்கள் எதிர்வரும் ஜனவரி 30 ஆந் திகதி ஆரம்பிக்கப்படும்.

இதற்கமைய 2025 தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களின் வகுப்புக்களை உரிய முறையில் ஆரம்பித்து வரவேற்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தினை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கல்வி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் இவ்வேலைத்திட்டத்தை ஒழுங்கமைப்பதை கவனத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளை ஆரம்பக்கல்வியின் நோக்கம், ஆரம்பக்கல்வியின் முதன்மை நிலைகள் ,ஆரம்பக்கல்வியில் தேர்ச்சி அடிப்படையிலான கலைத்திட்டம், பிள்ளைகளின் உடல்,உள அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் மற்றும் விருப்பத்திற்குறிய தேர்ச்சிகள், கணிப்பீடு மற்றும் இனங்காணும் வேலைத்திட்டம் தொடர்பாக தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் பெற்றோருக்கு இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் தெளிவுப்படுத்துவது மிக முக்கியமாகும். என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

( ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *