உள்நாடு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்க நீர் மட்டம் உயர்வு; எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழியும் மட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே, நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும்போது உடன் இந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாக திறக்கப்படுவதன் மூலம் கொத்மலை ஓயாவிற்கு தண்ணீர் பாய்ச்சப்படுமென்று இதற்குப் பொறுப்பான பொறியியயலாளர் ஏ.கே. செனவிரத்ன அறிவித்துள்ளார்.

கொத்மலை ஓயாவுக்குக் கீழே நுகவெல ஆற்றங்கரை, மாவத்துரை, மகாவலி கங்கை, உலப்பனை பிரதேசத்திலிருந்து கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல வரையான பகுதிகள் ஆபத்தான எல்லை என்பதனால் ஆற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

( ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *