மழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சவளக்கடை, சாளம்பைக்கேணி, மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அதிகளவான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது. இதன் காரணமாக வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது இல்லங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றமையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அதிகளவான வெள்ளம் காரணமாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதுடன், வீதிகளில் காணப்பட்ட மரங்களும் சரிந்து வீழ்ந்து உள்ளது. மேலும் அதிகளவான வயல் நிலங்களும் நீரில் மூழ்கி காணப்படுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேலை அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நாவிதன் வெளியே பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)