உள்நாடு

மரக் குவியல் உபகரணங்களுடன் மூன்று இராணுவ வீரர்கள் கைது

அனுமதிப்பத்திரமின்றி அங்கிகரிக்கப்படாத தனியார் மரக் கொட்டகை ஒன்றை நடாத்திச் சென்ற இராணுவ சிப்பாய்கள் மூவரை மரக் குவியல் மற்றும் உபகரணங்களுடன் கைது செய்துள்ளதாக பிரியங்கரகம பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்நேவ வுல்நேவ பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் எப்பாவல ஹல்மில்லேவ , பழுகஸ்வெவ விஜிதபுர மற்றும் கல்கமுவ பாழுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு சாதாரண வீரர்களும் கோப்ரல் ஒரு வருமாவர்.

 கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய பிரியங்கரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லக்சிறி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் எப்பாவல இஹல ஹல்மில்லேவ அதிராணிகம பகுதியில் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மூன்று சந்தேக நபர்கள்களை கைது செய்துள்ளதுடன் தச்சு கொட்டகையில் இருந்து முடிக்கப்பட்ட இரண்டு செட் நாற்காலிகள், இரண்டு மேசைகள் மற்றும் கட்டிலொன்று உட்பட மரச் சாமான்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பல தச்சு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *