மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபர் மிஹிந்தலையில் கைது
அனுராதபுரம் பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.
கனேவெல்பொல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அனுராதபுரம், எப்பாவல , தம்புத்தேகம ‘மிஹிந்தலை மற்றும் கலென்பிந்துனுவெவ உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி அதனை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் 13 மோட்டார் சைக்கிள்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)