உள்நாடு

அக்கரைப்பற்று உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடலும், புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் கௌரவிப்பும்

அக்கரைப்பற்று உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடலும் புத்தளம் மாவட்டத்தில் ஆளும் தரப்பில் முதன் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசலை கௌரவிக்கும் நிகழ்வும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் அக்கரைப்பற்று கிளையினால் மதுரங்குளி ட்ரீம் வரவேற்பு மண்டபத்தில் அக்கரைப்பற்று கிளை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம் எம் எம் மிஹ்ழார் (நளிமி) தலைமையில் நடைபெற்றது

ஜம்மியத்துல் உலமாவின் அக்கரைப்பற்று கிளைத் தலைவர் எம் எம்.எம் மிஹ்ழார் தனது வரவேற்புரையில் ஜம்இய்யாவினால் அடைய வேண்டிய இலக்குகள்,மற்றும் ஜம்இய்யாவினால் செய்யப்பட்ட சேவைகள், மற்றும் உலமாக்களின் பங்களிப்பு எவ்வளவு தேவை என்ற விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் செயலாளர்
அஷ்ஷெய்க் ஏ.ஏ.ஏ .முஜீபுர் ரஹ்மான் (மனாரி)யினால் இந்த ஒன்று கூடலின் நோக்கம் ஜம்இய்யாவின் அங்கத்துவத்தை அதிகரிப்பதும், உலமாக்களுக்கு மத்தியில் அறிமுகத்தை உருவாக்கி கொள்வது பற்றியும், உப குழுக்களின் செயற்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம்.பைசல் கெளரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. அந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம் எம் எம் மிஹ்ழார் (நளிமி), அஷ்ஷெய்க் ஏ.எல் பஸ்லுல் பாரிஸ் (நளிமி), அஷ்ஷெய்க் எம்.ஜே அப்துல் லத்தீப் (மதனி), அஷ்ஷெய்க் இஸட்.ஏ சன்ஹீர் ( கபூரி) ஆகியோரால் அ இ ஜ உலமா அக்கரைப்பற்று கிளை சார்பாக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே எம் பைசலுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் தன்னுடைய எதிர் கால திட்டங்கள் பற்றியும், சமூகத்திற்கு நம்பிக்கை யாக நடந்து கொள்வேன் என்ற உறுதிமொழியையும் தனது உரையில் வெளிப்படுத்தியதோடு, தனது அரசியல் பயணத்தில் ஜம்இய்யாவின் வழிகாட்டல்களையும் வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *