காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்..!
காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.ஏ.நெளஸாத் தலைமையில் இடம்பெற்ற இரத்தான நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் அலிமா ரஹ்மான் மேட்பார்வையில் இடம்பெற்றது.
காத்தான்குடி தள வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 09 மணி தொடக்கம் இடம்பெற்ற இவ் இரத்தான நிகழ்வில் அதிகமான குருதி கொடையாளர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஆர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
(எம்.பஹத் ஜுனைட்)