வளமான வார்த்தைகள் பேசுவோம்
நாம் நினைக்கின்றோம்.
நினைத்துவிட்டு பேசுகின்றோம்.
நாம் நினைக்கின்றவை பெரும்பாலும் எமது வாயிலிருந்து வெளியே பாய்ந்து மற்றொருவரின் காதுகளில் இலேசாக புகுந்துகொள்கின்றன.
அப்படி மற்றவர் காதுகளில் புகுந்துவிட்ட வார்த்தைகளை எம்மால் ஒருபோதும் வெளியே எடுத்துவிட முடியாது.
மற்றவர்கள் எம்மை பற்றி நினைக்கின்ற அவ்வாறே உணர்கின்ற விதத்தில் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.
எமது தலைக்குள் நடக்கின்ற விடயங்களை மற்றவர்களுடன் தொடர்புகொள்ள வைக்கின்ற முக்கிய அடையாளமாக இருப்பது எமது வார்த்தைகள்.
▪️நாம் எமது கவலைகளையும் கனவுகளையும் வார்த்தைகளால் பகிர்ந்துகொள்கிறோம்.
▪️அன்பையும் ஆனந்தத்தையும் வார்த்தைகளால் பகிர்ந்துகொள்கிறோம்.
▪️கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்கிறோம்.
▪️ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருடன் வார்த்தைகளால் தொடர்பு கொள்கிறோம்.
எங்களது இந்த வார்த்தை பரிமாற்றத்தின்
உண்மை நிலை என்ன..❓
நாங்கள் மற்றவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தும் எங்கள் வார்த்தைகளின் தரம் என்ன ❓
எங்கள் வார்த்தைகள் மற்றவரின் மனதில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன….❓
என்று கொஞ்சம் தேடிப் பார்க்க இப்போதே ஒரு சிறிய நேரத்தை ஒதுக்கி சிந்தனை செய்வோம்.
இது எங்களை தரமான தொடர்பாளர்களாக மாற்றிக் கொள்ள வழிவகுக்கும்.
👍🏾👍🏾
(தொடரும்..)
✍🏼 அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்