உள்நாடு

புத்தள மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தள மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளரும்,புத்தள மாவட்ட அமைப்பாளருமான என்.ரீ தாஹீருக்கு வாக்களித்த மக்களுக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நன்றி கூறினார்.

நேற்று (23) மாலை ஏத்தாழையில் உள்ள தாஹிரின் இல்லத்தில் இந்த மக்கள் சந்திப்பு இடம் பெற்றது .
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் தாஹிர் மற்றும் எம்.எச் முஹம்மத் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பரிந்துரையின் அடிப்படையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு இரு ஆசனங்கள் புத்தளம் மாவட்டத்தில் உரித்தான நிலையில் என்.ரி. தாஹிர் மூன்றாவது இடத்தை அடைந்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்த சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *