கட்டுகஸ்தோட்டையிலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் மாணவிகளுக்கு கற்றல் உகரணங்களும், புத்தகப் பைகளும் வழங்கி வைப்பு
கண்டி நகர் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் ஜெர்மனி ஹெல்பனின் நிதியுதவியுடன் ஹசன் மௌலவி நற்பணி மன்றத்தின் அசிஷா பவுண்டேஷன் ஊடாக கட்டுகஸ்தோட்டையிலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தக பைகளும் வழங்கும் நிகழ்வு கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரி மண்டபத்தில் அதிபர் கலில்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தின் அசிஷா பவுண்டேஷன் பணிப்பாளர் சாதிக் ஹசன் அவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். எச். சலீம்டீன். உப தலைவர் பாசில் , உப தலைவர் ரீஷா வாஹிட், பொருளாளர் ஏ. டப்லியூஃ ஏ. ரஷீட் செயற்குழு உறுப்பினர் சப்ராஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரி, இனிகல மகா வித்தியாலயம், உள்ளிட்ட பல பாடசாலைகளிலுள்ள 200 மாணவர் மாணவிகளுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கி வைப்பட்டன.
தற்போதைய நாட்டின் சூழ்நிலை கருதி இலங்கையின் பல பாகங்களில் கல்வி அபிவிருத்தி மற்றும் அவசர நிவாரண வேலைத்திட்டங்களை முஸ்லிம் ஜெர்மன் ஹெல்ப்அன் நிறுவனத்தினூடாக கிண்ணியா ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தின் அசிஸா பவுண்டேஷன் ஏற்பாடு செய்து வருகின்றன .
(இக்பால் அலி)