வேர்ல்ட் விஷன் கிரேஸ் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கான உளவியில் முதலுதவி தொடர்பான செயலமர்வு
வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கிரேஸ் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான உளவியில் முதலுதவி தொடர்பான செயலமர்வு ஒன்று வெள்ளிக்கிழமை (22) சீ கிரீன் தனியார் விடுதியில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் கிரேஸ் வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் தீபிகா பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி செயலமர்வில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின்.கிரேஸ் வேலைத்திட்டத்தின் முகாமையாளர் தீப்தி சில்வா, தொழில்நுட்ப அதிகாரி எரந்த மற்றும் மொழிபெயர்ப்பாளர் றொபின் ஆகியோருடன் கற்பிட்டி பிரதேச செயலாளர், பொலிஸ் நிலைய அதிகாரி, சுகாதார பிரிவு தாதியர் உத்தியோகத்தர், மதகுருமார், பாடசாலை அதிபர்கள். ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வில் மனோதத்துவ ரீதியில் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனார்த்தங்கள் அது எவ்வாறு ஏற்படுகிறது அனார்த்தத்தின் போது மனிதனுக்கு எவ்வாறான உதவிகள் தேவை? எவ்வாறு உதவி செய்வது என்பவற்றுடன் சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் முறன்பாடுகள் என்பது கிரேஸ் வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்கள் என்பதையும் நட்பு ரீதியான கலந்துரையாடல்களையும் விரிவுரைகளையும் பேராதானை பல்கலைக்கழக உளவியல் விரிவுரையாளர் காந்தி ஹெட்டிகொட வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)