உள்நாடு

சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

2024 ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன.

இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.

இதன்படி, அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர (G.C.E(A/L)) பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2024 கல்வியாண்டு ஒரு வாரத்தினால் நீடிக்கப்படுகின்றது

Third Term of Schools Ends on 24.01.2025

Sinhala, Tamil School – Term 03
Step 1 : 26.08.2024 – 22.11.2024
Step 2 : 02.01.2025 – 24.01.2025

Muslim School – Term 03
Step 1 : 19.09.2024- 13.12.2024
Step 2 : 02.01.2025 – 24.01.2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *