உணவு விஷமாகியதால் 9 சிறுமிகள் வைத்தியசாலையில்
உணவு விஷமாகியதால் 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
தலத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாரகமவில் அமைந்துள்ள மகளிர், சிறுவர் பராமரிப்பு முகாமில் இருந்த 09 சிறுமிகளே இவ்வாறு உணவு விஷமாகியதால் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சோறுடன் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இச் சிறுமிகள் இன்று (21) அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
( ரஷீத் எம். றியாழ்)