உள்நாடு

இன்று உதயமாகிறது புதிய தலைமுறைக் கட்சி

கிழக்கு அரசியலில் ஒரு புதுத் திருப்பமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷர்ரப் தலைமையில் புதிய கட்சியொன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறைக் கட்சி என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ள குறித்த கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை இன்று பொத்துவில் நகரில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக் கூட்டத்தில் முஷர்ரப் அறிவிப்பார் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்ற.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தலைமையிலான “கேஸ் சிலிண்டர்” கூட்டணி 88 வாக்குகளில் உறுப்பினரை இழந்தமை குறிப்பிடத் தக்கதாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *